இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் …புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குசந்தை !

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்திய பங்குகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, இரு தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் காணப்பட்டு வந்தது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்றனர். இதனால், பங்குச்சந்தை வர்த்தகம் மந்த நிலையில் இருந்தது. இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், வர்த்தகத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குகள் புதிய […]

மதுரை சித்திரை திருவிழா….கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு கோலாகலம் !

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா, கோலாகலமாக நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக, தெற்கு மாசி வீதி அருள்மிகு வீரராகவப் பெருமாள் வெள்ளிக் […]

முத்தரப்பு ஒருநாள் இறுதிப்போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி !

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் விளையாடின. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 […]

கவிப்பேரரசு வைரமுத்து தாயார் உடல்நலக் குறைவால் காலமானார் !

கவிப்பேரரசு வைரமுத்து தனது தாயாரின் உடலைக கண்டு கண் கலங்கியதோடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பூர்வீக வீட்டில் கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் வசித்து வந்தார். இந்நிலையில் 92 வயதான அங்கம்மாள் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று இயற்கை எய்தினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கவிப்பேரரசு வைரமுத்து தனது தாயாரின் உடலைக கண்டு கண் கலங்கியதோடு […]

91ஆயிரத்தை தாண்டிய பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பம் !

பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 91 ஆயிரத்து 414 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 7ம் தேதி தொடக்கி தொடங்கப்பட்டது பொறியியல் படிப்புடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கியது. இதற்காக தனித்தனியாக வலைதளப் பக்கங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,25,345 சேர்க்கை இடங்கள் […]

பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் -வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மீறி பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருவதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. அதேவேளை, இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக […]

காசா மீது நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு !

காசா முனையில் இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி […]

முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை !

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், முப்படைத் தளபதி அனில் செளஹான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பாகிஸ்தான் விவகாரத்தில் முப்படைகள் மேற்கொள்ள […]

நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு !

என்எல்சி இந்திய நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்க மின்மாற்றியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்க மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். மேலும், திடீரென தீ […]

சென்னையில் தடம்புரண்ட மின்சார ரயிலால் பயணிகள் அதிர்ச்சி !

ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி வந்துகொண்டிருந்த மின்சார ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னை ராயபுரம் அருகே ஆவடியில் இருந்து புறநகர் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, சென்னை கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 3வது பெட்டியில் இரண்டு ஜோடி சக்கரம் தடம்புரண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ […]