தமிழகத்தில் நாளை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமா தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 3 மற்றும் 4-ஆம் […]

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற தக்‌ஷன் விஜய்யின் “சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர்” தொடக்க விழா !

தக்‌ஷன் விஜய்யின் “சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர் ” மலையாள படத்தின் தொடக்க விழா கேரளாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ் திரையுலகில் ‘கபளிஹரம்’ என்ற படத்திலும், மலையாள திரையுலகில் ‘இத்திகர கொம்பன்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளவர் தக்‌ஷன் விஜய். இவர் தற்போது “சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர் ” மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த திரைபடத்திற்கான தொடக்க விழா கேரளாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் தக்‌ஷன் விஜய், குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.மேலும்,தக்‌ஷன் விஜயின் எதார்த்த […]

திருவள்ளூர் | திருமணமான 4வது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை !

பொன்னேரி அருகே திருமணமான 4வது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி. பட்டதாரி பெண்ணான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 4 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் இளம்பெண் லோகேஸ்வரியை அவரது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. 10 சவரன் […]

அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் !

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணையின் போது இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், நகை திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் போலீசாரால் விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையின் போது அஜித்குமார் மரணமடைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அஜித்குமார் மரணம் தொடர்பாக 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் 5 போலீசார் […]

விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் நிவாரணம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயை நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான […]

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு ஆவணங்களை நாளை சமர்ப்பிக்க வேண்டும் -நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு !

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நாளை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், நகை திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் போலீசாரால் விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையின் போது அஜித்குமார் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி மரியா கிளாட்அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, […]

பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் !

பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ள திட்டங்கள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ரூ.1,853 கோடி ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், ராமநாதபுரம் – தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க திட்ட […]

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை -அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு !

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும், அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், -“சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக, ஏற்கனவே கடந்த 20ம் தேதி வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என விரிவான விளக்கம் […]

மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிப்பதை கைவிடுவதாக பாஜக அரசு அறிவிப்பு !

மகாராஷ்டிராவில் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, இந்தி மொழி திணிப்பதை கைவிடுவதாக பாஜக அரசு அறிவித்துள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி மகாராஷ்டிராவில் ஆங்கிலம் மற்றும் மராத்தி வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்தி விருப்ப மொழியாக மட்டுமே கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், இந்தி […]

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மீட்க வேண்டும்- ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களுடன், அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர் என்றும், இத்தகைய கைது நடவடிக்கைகள், படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பு ஆகியவை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது […]