நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்ற கமல்ஹாசன்!

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ள கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தல் – மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி !

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாக கூறி அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்களை துன்புறுத்துகின்றனர் என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில், ஒடிசாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் கைது, டெல்லியில் வங்காள மக்கள் வெளியேற்றம், கூச் பெஹாரை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு அசாமில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் போன்றவை பரபரப்பை ஏற்படுத்தின. இதனை கண்டித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்கு […]

நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் அடுத்த இரண்டு […]

சர்வதேச விண்வெளிப் பயணத்தில் இருந்து பூமிக்கு வந்தது டிராகன் விண்கலம் !

சர்வதேச விண்வெளிப் பயணத்தில் இருந்து 4 வீரர்களுடன் பூமிக்கு டிராகன் விண்கலம் இன்று பூமியை வந்தடைந்தது. அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25ம் தேதி விண்வெளி சென்றனர். 31 நாடுகளின் 60 ஆராய்ச்சிகளை 4 வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்தனர். இந்நிலையில் இவர்களுடைய 18 நாட்கள் ஆராய்ச்சி பணி நிறைவடைந்து, சர்வதேச விண்வெளி […]

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றிபெற்றது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் வெற்றிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தார். நேற்றைய 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் உடன் […]

தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் புதிய எஸ்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விவேகானந்தா சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கையா நியமனம் […]

கம்போடியா மோதல் குறித்து அந்நாட்டு பிரதமர் ஹன் மானெட் பேச்சு !

கம்போடியா மோதல் சர்ச்சைக்குரிய பகுதியில் தான் தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் என்று மூன்று நாடுகள் சந்தித்துவருகின்றனர். கம்போடியாவின் அண்டை நாடானா தாய்லாந்து உடன் அந்நாட்டின் உறவு கடந்த மே மாதத்திலிருந்து நீண்ட காலமாக நிகழ்ந்து வந்த எல்லைத் தகராறு மே 28 அன்று சிறு மோதலுக்கு வழிவகுத்தது. இந்த மோதல் சர்ச்சைக்குரிய பகுதியில் தான் தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் என்று மூன்று நாடுகள் சந்திக்கின்றன. இந்த துப்பாக்கி சூடு சண்டையில், காம்போடியா சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். இந்த […]

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவிற்கு பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் மறைவிற்கு பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் செய்தி வெளியிலுள்ளார் . அந்த அறிக்கையில் ”பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர். கேப்டனுடன் இணைந்து பொன்மனச் செல்வன் திரைப்படத்தில் அம்மாவாக நடித்தவர். அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக் கூடியவர். கலை உலகில் அரசியாக வாழ்ந்தவர். அவரது இழப்பு திரை உலகிற்கே ஈடு இணையே இல்லாத இழப்பு, அவர் […]

வேட்டுவம் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் படபிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு !

வேட்டுவம் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் படபிடிப்பு செய்யும்போது அவர் காருடன் பறந்து சென்று கீழே விழுந்து உயிரிழக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் வேட்டுவம். இந்த படம் நாகை மாவட்டத்தின் கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாகவே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு சாகச காட்சி படம் பிடிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் நேற்று […]

இரண்டு என்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் துண்டிக்கப்பட்டதே அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம்!

இரண்டு என்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் துண்டிக்கப்பட்டதே அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்பது உறுதியாகியுள்ளது. குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார்.மொத்தம் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து […]