கோவையில் உதவி ஆணையர் இந்திரா லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது !

கோவையில் தனியார் கோவிலை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் இந்திரா லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் தனியார் பராமரித்து வரும் கோவில் ஒன்று செயல்பட்டு வருகிரது. இக்கோவிலில் வருவாய்ப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.இந்நிலையில், நிதி மேலாண்மை முறையாக இல்லை என்பதால் இந்த கோவிலை இந்து சமய அறநிலைய துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என […]

திரைப்பட இயக்குனர் வேலுபிராபகரன் உடல்நலக் குறைவால் காலமானார்!

திரைப்பட இயக்குனர் வேலுபிராபகரன் உடல்நலக் குறைவால் காலமானார். 1989-ம் ஆண்டில் வெளியான நாளைய மனிதன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் வேலு பிரபாகரன். இதைத்தொடர்ந்து சத்யராஜ் நடித்த பிக்பாக்கெட், பிரபு நடித்த உத்தமராசா, மோகன் நடித்த உருவம் போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். பின்னர், அசுரன், கடவுள், புதிய ஆட்சி, புரட்சிக்காரன் போன்ற சமூகம் சார்ந்த கருத்துகள் நிறைந்த படத்தையும் இயக்கி நற்பெயரை எடுத்துள்ளார். 68 வயதான வேலு பிரபாகரனுக்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்ட […]

ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டியில் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா தோற்கடித்தார். ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டி அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வெகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4வது சுற்றில் இந்தியாவின் 19 வயதே ஆன இளம் கிரான்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, நார்வேவைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். வெள்ளை நிற காயுடன் விளையாடிய பிரக்ஞானந்தா […]

45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் -தமிழக அரசு அரசாணை வெளியீடு !

தமிழ்நாட்டில் உள்ள 45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ.130 கோடி ஒதுக்கி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 50 அரசு மருத்துவமனைகளில் சுமார் ரூ.160 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்தார். அதனடிப்படையில் முதல்கட்டமாக 45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது. இதில், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரியில் ஆகிய உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் […]

சிரியா ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல் !

சிரியாவில் கடும் சண்டை மூண்டுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு சிரியாவின் ஸ்வீடா பகுதியில் சிறுபான்மை ஷியா பழங்குடியினரான ட்ரூஸ் போராளிகளுக்கும், சன்னி பெடோயின் பழங்குடியினருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் போக்கு நீடித்தது. இந்த நிலையில், சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தனர். இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் அரசு தொலைக்காட்சி கட்டிடத்தின் மீது ஒரு […]

புதுக்கோட்டையில் 2ம் கட்ட அகழாய்வுப் பணியில் 1982 தொல் பொருட்கள் கண்டெடுப்பு !

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்ற 2ம் கட்ட அகழாய்வுப் பணியில் 1982 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சிக்குட்பட்ட பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 2024 மே மாதம் தொடங்கியது. மொத்தம் 17 குழிகள் அமைத்து, நடைபெற்று வந்த அகழாய்வு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இங்கு நடைபெற்ற அகழாய்வு பணிகள் குறித்து தொல்லியல் துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், இங்கு முதல் கட்ட அகழாய்வு பணி, […]

திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி வீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள, இழைக்க உள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்துக்கூற வேண்டும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின்கீழ் […]

நியூயார்க் நகரில் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பு !

நியூயார்க் நகரில் கனமழை காரணமாக மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்தது. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நெடுஞ்சாலைகள் மற்றும், சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக நியூயார்க் நகரில் மெட்ரோ ரெயில் […]

அதிரடியாக குறைந்த தங்கத்தின் தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 72 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் […]

இந்தியா – இங்கிலாந்து மகளிர் போட்டி சவுத்தம்டனில் இன்று நடைபெறுகிறது !

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டனில் இன்று நடைபெறுகிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி முதல்முறையாக 3-2 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் […]