காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு !

ஈரோடு மாவட்டம், காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பழைய பாசன பகுதிகளான காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதன்மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள, பவானி, மொடக்குறிச்சி கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முதலமைச்சரின் உத்தரவுப்படி, காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.
இதனை, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.