துணைவேந்தர் நியமனம் விவகாரம் |உச்ச நீதிமனறத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு !

துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டப்பிரிவுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, உச்ச நீதிமனறத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது.

இதைத்தொடர்ந்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டது.இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பிரதான மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை தள்ளிவைத்தது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts