உக்ரைன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய ரஷியா-மிகப்பெரும் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு !

உக்ரைன் மீது ஒரே நாளில், 477 டிரோன்கள், 60 ஏவுகணைகள் மூலம் ரஷியா மிகப்பெரும் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் – ரஷியா இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதனால் இரு தரப்பிலும் பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா தீவிரத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. அண்மையில், உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது 477 டிரோன்கள், 60 ஏவுகணைகள் மூலம் ரஷியா மிகப்பெரும் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதல்களால் லிவிவ், பொல்டாவா, மைக்கோலாய்வ், செர்காசி மற்றும் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் ஆகிய நகரங்களில் வெடிப்புகள் பதிவாகியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
செர்காசியில், பல மாடிக் கட்டிடங்கள் மற்றும் ஒரு கல்லூரியும் பெரும் சேதமடைந்ததாகவும் இதில், ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அதோடு, உக்ரைனிய F-16 போர் விமானி ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.