கடலில் மூழ்கும் அபாயத்தில் துவாலு தீவு -ஆஸ்திரேலியாவிற்கு தஞ்சம் அடையும் மக்கள் !

துவாலு தீவில் வசித்து வரும் மக்கள் ஆஸ்திரேலியாவிற்கு நிரந்தரமாக குடிபெயர்வதற்காக விசா கோரி விண்ணப்பித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா அருகிள்ள உலக வரைபடத்தில் புள்ளி போன்று தெரியக்கூடிய துவாலு என்ற தீவு அமைந்துள்ளது.
இந்த தீவு இன்னும் 25 ஆண்டுகளில் கடலுக்குள் முழுமையும் மூழ்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, சில சின்னஞ்சிறு தீவுகள் கடலில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் துவாலு தீவில் வசித்து வரும் மக்கள் ஆஸ்திரேலியாவிற்கு நிரந்தரமாக குடிபெயர்வதற்காக விசா கோரி விண்ணப்பித்துள்ளனர்.
மேலும்,இந்த தீவில் 11 ஆயிரம் பேர் மட்டுமே உள்ள நிலையில், 4 ஆயிரம் பேர் ஆஸ்திரேலியாவிடம் விசா கோரியுள்ளனர்.
இது போன்றவர்களுக்கு கிளைமேட் விசா என்ற பெயரில் சிறப்பு விசா வழங்கி ஆஸ்திரேலியா அரவணைப்பது மட்டுமல்ல அவர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் போன்ற வசதிகளையும் செய்து தருவதாக கூறியுள்ளது.
பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளில் ஒன்றான கடல் நீர் மட்ட உயர்வு பிரச்சினை அடுத்து இந்தியா, வங்கதேசம், நெதர்லாந்து போன்ற மேலும் பல நாடுகளை பாதிக்கும் என்பதும் அதிர்ச்சி அளித்துள்ளது.