திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை குற்றவாளி ராஜுவுக்கு நாட்கள் காவல் விசாரணை -போக்சோ நீதிமன்றம்!

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ராஜு பிஸ்வகர்மாவை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை 15 தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், 14 நாட்களுக்கு பின் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் நடந்த விசாரணையில் சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் குற்றவாளியை திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுபடி 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜு பிஸ்வகர்மாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஆரம்பாக்கம் போலீசார் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரிகுற்றவாளியை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்