மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற தக்ஷன் விஜய்யின் “சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர்” தொடக்க விழா !

தக்ஷன் விஜய்யின் “சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர் ” மலையாள படத்தின் தொடக்க விழா கேரளாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தமிழ் திரையுலகில் ‘கபளிஹரம்’ என்ற படத்திலும், மலையாள திரையுலகில் ‘இத்திகர கொம்பன்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளவர் தக்ஷன் விஜய்.
இவர் தற்போது “சொப்னங்கள் விற்குந்ந சந்திரநகர் ” மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த திரைபடத்திற்கான தொடக்க விழா கேரளாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் தக்ஷன் விஜய், குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.மேலும்,தக்ஷன் விஜயின் எதார்த்த நடிப்பை பார்த்த படக்குழுவினர், இப்படத்தின் கதாபாத்திரத்துக்கு இவர் தான் பொருத்தம் என்று முடிவு செய்து, இவரை நடிக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில்,மலையாளத்தில் இவர் நடிக்கும் ‘சொப்பனங்கள் விற்குந்த சந்திரநகர்’ படம் இவருக்கு 2-வது திரைப்படமாகும்.

தற்போது, தக்ஷன் விஜய்யின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள’ஐ அம் வெயிட்டிங்’ திரைப்படத்தின் படபிடிப்பு முடித்துள்ளார்.தொடர்ந்து தமிழிலும், மலையாளத்திலும் தொடர்ந்து தக்ஷன் விஜய் நடிப்பில் படங்கள் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
-ஜெ.துரை