எதிர்காலத்துக்கான திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு ஸ்டைல் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் !

இந்தியாவின் எதிர்காலத்துக்கான திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு ஸ்டைல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் சென்று சேர்க்கும் ஊழியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் புதிய வசதிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
முதல்கட்டமாக சென்னை அண்ணா நகரில் உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கென பிரத்யேக குளிர்சாதன காத்திருப்பு அறை, கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு ஸ்டைல் என்றும் வெய்யிலில் வாடுபவருக்கு நிழல் மரமாக, தாகத்தில் தவிப்பவருக்கு ஒரு குவளை தண்ணீராக, துன்பத்தில் உழல்வோருக்கு ஆதரவுக்கரமாக இருப்பதுதான் திராவிட மாடல்! என்றும் பதிவிட்டுள்ளார்