தருமபுரியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து !
தருமபுரி அருகே வீட்டின் மீது அரசுப் பேருந்து மோதியதில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை அடுத்த உழவன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு 4 வயதில் அர்திகா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் தினமும் அவ்வழியாக செல்லும் அரசு பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இன்று காலை சாலையோரத்தில் உள்ள நரசிம்மன், சோனியா தம்பதியரின் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. […]
கோவில்பட்டி அருகே லார் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு !
கோவில்பட்டி அருகே லார் மீது கார் மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதியதியாக பணிபுரிந்து வரும் பூர்ன ஜெய ஆனந்த், நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் உதயசூரியன், ஸ்ரீதர் குமார், காவலர் நவீன்குமார், ரெக்கார்டு கிளார்க் வாசு ராமசந்திரன், வழக்கறிஞர் தனஞ்செய ராமசந்திரன் ஆகியோர் திருச்செந்தூர் வந்து விட்டு, மீண்டும் தஞ்சாவூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடி மாவட்டம் மதுரை பைபாஸ் ரோடு, கோவில்பட்டி […]
கொச்சியில் நடைபெற்ற சரக்குக் கப்பல் விபத்து பேரிடராக அறிவிப்பு -கேரள அரசு!
கொச்சி அருகே, சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை கேரள அரசு பேரிடராக அறிவித்துள்ளது. லைபிரீயன் நாட்டுக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று கடந்த 25ம் தேதி விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகம் நோக்கி வந்தபோது கடலில் மூழ்கத் தொடங்கியது. தகவலறிந்து வந்த கடலோர காவல் படையினர் ராணுவ ஹெலிகாப்டர் உதவியோடு கப்பலில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே, கப்பலில் ஏற்றிவந்த 367 மெட்ரிக் டன் சல்பர் எரிவாயு எண்ணெயும், 84 மெட்ரிக் டன் […]
விருதுநகர் | இரண்டு இருசக்கர வாகனம்நேருக்கு நேர் மோதி இருவர் பலி !
அருப்புக்கோட்டையில் எதிரே வந்த வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானத்தில் இருவர் பலியாகியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல். இவருக்கு வயது 23. காரியாபட்டியில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர், இன்று காலை, புதிய இருசக்கர வாகனத்தை டெலிவரி செய்ய அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக காரியாபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது […]
சத்தீஸ்கரில் கனரக வாகனத்தின் மீது மினி லாரி மோதி விபத்து -14 பேர் உயிரிழப்பு !
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சட்டவுட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ராய்ப்பூர்- பலோதாபஜார் சாலையில் உள்ள பனார்சி கிராமத்தில் திருமண விழாவில் கலந்துகொண்டு, மினி லாரியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, எதிரே அதிவேகமாக வந்த கனரக சரக்கு வாகனம் மீது மினி லாரி மோதி விபத்திக்குள்ளானது. இந்த விபத்தில் மினி லாரியில் வந்த குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த […]
விருதுநகர்| ராட்டினத்தில் இருந்து பெண் கீழே விழுந்து விபத்து !
விருதுநகரில் ராட்டினத்தில் இருந்து திடீரென பெண் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்குனி பொங்கலையொட்டி, விருதுநகரில் தனியார் பள்ளியில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பொருட்காட்சிக்கு சென்ற கவுசல்யா என்பவர் அங்குள்ள ராட்டினத்தில் சுற்றியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, கவுசல்யா திடீரென தவறி விழுந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவரை பொருட்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் மீட்டு பொருட்காட்சியில் தயார் நிலையில் இருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ராட்டினம் […]
நியூயார்க் |சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விபத்து !
நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஹட்சன் நதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளானது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஹட்சன் நதியில் மன்ஹாட்டன் நகரைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதை பற்றி நியூயார்க் மேயர் தெரிவிக்கையில்,உயிரிழந்தவர்களில் ஸ்பெயினிலிருந்து வருகை தந்த ஒரு விமானி மற்றும் ஒரு குடும்பத்தினர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த […]