முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளைச் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு மற்றும் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். சென்னை அப்பலோ மருத்துவமனையில் திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் அதிகமான மக்களை இணைத்து மாபெரும்வெற்றி அடைந்து வருவதற்கு காரணமான கழக உடன்பிறப்புகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அதேசமயம் உறுப்பினர் சேர்க்கையில் […]

தமிழ்நாட்டின் உரிமைக்காக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக குரல் எழுப்பும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் நிதி, மொழி, கல்வி உரிமை ஆகியவற்றுடன் இந்தியாவின் கூட்டாட்சி உரிமைக்காகவும் வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக குரல் எழுப்பும் என்று, திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் 21ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் எந்தவிதமான விவாதங்களை எழுப்ப […]

திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி வீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள, இழைக்க உள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்துக்கூற வேண்டும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின்கீழ் […]