அழியும் நிலையில் உள்ள தங்களது பாரம்பரியக் கலையை மீட்டெடுக்க வேண்டும் – மலைவாழ் மக்கள் கோரிக்கை!

அழியும் நிலையில் உள்ள தங்களது பாரம்பரியக் கலையை மீட்டெடுக்க வேண்டும் என, கொடைக்கானல் தோடர் இன மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 62வது மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் கொடைக்கானல் பூம்பாறை சஷ்டி புகழ் சார்பாக மலைவாழ் மக்களின் தோடர் நடனம் நடைபெற்றது. மலைவாழ் மக்கள் இந்த நடனத்தை, தங்களது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆடி வருகின்றனர். ஆடி மாதங்களில் நடவு செய்து விவசாயத்தில் ஈடுபடும்போது இந்த நடனத்தை அவர்கள் ஆடுவது […]

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா இரவு 7 மணி வரை திறக்க அனுமதி -தோட்டக்கலைத்துறை!

கோடை விடுமுறையையொட்டி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை இரவு 7 மணி வரை அனுமதிப்பதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கோடை விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் சுற்றுலா பயணிகள் பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, நட்சத்திர ஏரி போன்ற […]