மக்களின் குறைகளைக் கவனிக்க வேண்டும் -அரசு அதிகாரிகளுக்கு மின்சார வாரியத் தலைவர் எச்சரிக்கை !
மக்களின் குறைகளைக் கவனிக்க வேண்டும் கவனிக்காத அரசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சார வாரியத் துறைத் தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவிலேயே மின் வளர்ச்சியில் தமிழ்நாடு சீராக வழங்குவதில் முதன்மை மாநிலமாகவும் முதலிடமாகவும் உள்ளது என்றும் ஜவ்வாது போன்ற மலைப்பகுதிகளில் சிறப்பு […]
10 ஆண்டுகளில் சென்னை மெட்ரோ ரயில்களில் 30 கோடிப் போ் பயணம்!
சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த 10 ஆண்டுகளில் 30 கோடிப் போ் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள இந்த மெட்ரோ ரயிலில், பயணம் செய்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவை, விமான நிலையம் – விம்கோ நகா், சென்ட்ரல் – பரங்கிமலை இடையே 2 […]
அரசுக் காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி!
சிட்லபாக்கம் அரசுக் காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிக்கு, அங்குள்ள காவலாளி, பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, சிட்லப்பாக்கத்தில் செயல்படும் அரசு பெண்கள் காப்பகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். தந்தை இழந்த நிலையில், 8ம் வகுப்புப் படித்து வரும் அவர், காலில் காயங்களுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையின் விசாரணையில், இரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த காவலாளி தன்னிடம் தகாத முறையில் […]
சென்னையில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில் ஒப்பந்தம் !
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 இரயில் பெட்டிகளை கொண்ட 32 மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் Alstom Transport India நிறுவனத்திற்கு ரூ.1,538.35 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் கடந்த ஏப்ரல் மாதம் அன்று Alstom Transport India நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வுமையம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 10-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இன்று நாளையும் […]
கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வுமையம்!
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் தென் மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 30-ஆம் தேதி வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை […]
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு |5 மாதங்களில் தீர்ப்பு -சென்னை மகளிர் நீதிமன்றம் அதிரடி !
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கபட்டத்து. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் ஞானசேகரனுக்கு திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த வழக்குகளிலும் ஞானசேகரனை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஞானசேகரனின் கூட்டாளிகள் சென்னை ஆலந்தூரைச் சோ்ந்த குணால் […]
திருவான்மியூரில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் திருட முயன்ற வடமாநிலத்தவர்கள் கைது !
சென்னை திருவான்மியூரில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் முறைகேடாக பணத்தை திருட முயன்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங், பிரிட்ஜ் பான், ஸ்மித் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, திருவான்மியூர் திருவள்ளூர் நகரில் அமைந்துள்ள எஸ்பிஐ ஏடிஎம் ஒன்றில், மர்மமான முறையில் பணம் எடுக்கப்பட்டு வருவதாக எஸ்பிஐ நிறுவனத்தை சார்ந்தவர்கள் புகார் அளித்தனர். திருவான்மியூரில் அமைந்துள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரும் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கருப்பு நிற அட்டையை […]
அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் !
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. அந்தவகையில், கடந்த 3 நாட்களாக உயர்ந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 950 […]
70 லட்சம் மதிப்பிலான கஞ்சா போதை பொருட்களை தீயில் எரித்து அழிப்பு !
தாம்பரம் மாநகர காவல்துறையால் கைப்பற்றப்பட்ட 70 லட்சம் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எரித்து அழி க்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் ஜி.ஜே. மல்டிகிளேவ் எனும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனம் உள்ளது. இங்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன. தாம்பரம் மாநகர ஆணையர் அபின் தினேஷ் மொதக் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையர் மகேஸ்வரியின் தலைமையில், […]