தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று […]

சென்னை ஐஐடியில் படித்துவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை வடமாநில இளைஞர் ஒருவர் கைது !

சென்னை ஐஐடியில் படித்துவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் படித்துவரும் 20 வயது மாணவி ஒருவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 7:30 மணி அளவில் தனது கல்லூரி வளாகத்தில் உள்ள ஃபுட் கோர்ட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த மாணவி செல்லும் வழியில் வந்த ஒரு நபர் கையில் கட்டையை வைத்துக் கொண்டு மாணவியிடம் செல்ஃபோன் எண்ணை கேட்டு முடியை பிடித்து […]

சென்னை| அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 72 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. அந்த வகையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 70 ரூபாய்க்கும், […]

நாளை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !

தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 23 முதல் 27-ஆம் […]

சென்னையில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை -காவல் ஆணையர் அருண் உத்தரவு !

சென்னையில், மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வரும் நேரங்களில் தண்ணீர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரக்கூடாது என தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, வாக்கின்ஸ் தெரு சந்திப்பில், சிறுமி சவுமியா, இருசக்கர வாகனத்தில் தாயுடன் அமர்ந்து சென்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி சவுமியா மீது ஏறி இறங்கியது. இதில் சிறுமி தலை நசுங்கி அதே இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளி வேலை நேரங்களில் […]

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை முதல் 25-ஆம் தேதி வரை தமிழகத்தில் […]

விமான நிலையம் அருகில் லேசர் ஒளியைப் எழுப்பக்கூடாது – சென்னை விமான நிலையம் அதிரடி!

சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள் மற்றும் லேசர் ஒளியைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வந்த சில விமானங்களின் மீது சமீபகாலமாக இரவு நேரத்தில் பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிகழ்வு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சம்பவம் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து விமான நிலைய நிர்வாகமும், விமான நிலைய பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதனிடையே சென்னை விமான […]

எதிர்காலத்துக்கான திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு ஸ்டைல் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் !

இந்தியாவின் எதிர்காலத்துக்கான திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு ஸ்டைல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் சென்று சேர்க்கும் ஊழியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் புதிய வசதிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. முதல்கட்டமாக சென்னை அண்ணா நகரில் உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கென பிரத்யேக குளிர்சாதன காத்திருப்பு அறை, கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். […]

முதியோர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை-சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை !

முதியோர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது. மதுரையைச் சோ்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழகத்தில் முதியோர்களை பொது இடங்களில் தனித்து விட்டுச் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது எனவும் இதுபோன்று விடப்படும் முதியோர்கள் சுகாதாரக் குறைபாடுகளால் உடல் நலம் குன்றி, மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா் எனவும் தேசிய முதியோர் மையங்களை அமைப்பது தொடா்பாக ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆனால், எந்த மாவட்டத்திலும் இந்த […]

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இதனால் இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை […]