ஆஸ்ட்ரவா கோல்டன் ஸ்பைக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா!

ஆஸ்ட்ரவா கோல்டன் ஸ்பைக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தி உள்ளார். செக் குடியரசு நாட்டில் நேற்று ‘ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்’ சர்வதேச தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரரும் பாரிஸ், டைமண்ட் லீக் போட்டிகளில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். இப்போட்டியில் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பில் பவுல் செய்தார். இரண்டாவது வாய்ப்பியில் 83.45 மீட்டர் தூரம் வரை ஈட்டியை […]