பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் !

பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ள திட்டங்கள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ரூ.1,853 கோடி ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், ராமநாதபுரம் – தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க திட்ட […]

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மீட்க வேண்டும்- ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களுடன், அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர் என்றும், இத்தகைய கைது நடவடிக்கைகள், படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பு ஆகியவை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது […]

விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிப்பு தகவல் உண்மையில்லை -ஒன்றிய அரசு விளக்கம்!

விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என்று, ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதைத் தவிர்க்க, விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நீருக்கு ஒன்றிய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இது மொத்த நிலத்தடி […]

தொகுதி மறுவரையறை குறித்து ஒன்றிய அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !

தொகுதி மறுவரையறை குறித்து ஒன்றிய அரசு தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “2026-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது எனவும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித் திட்டத்தை பாஜக […]

தமிழகத்திற்கு 25% இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன் ?சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆர்டிஇ சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீடு இடங்களுக்கு, தமிழகத்துக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 25% இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாரயணன் அமர்வு முன் நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், […]

முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும்-உச்சநீதிமன்றம்!

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு சார்பில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு கேரளா முன்பு அனுமதி வழங்கியது என்றும், ஆனால் தற்போது, […]