தென்காசியில் விஷ கதண்டு கடித்து வயதான தம்பதியினர் உயிரிழப்பு !
தென்காசியில் விஷ கதண்டு கடித்து வயதான தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், சீவநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் அன்னதானம் சாப்பிடுவதற்காக அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்பொழுது, அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ கதண்டுகள் திடீரென கலைந்து அங்கும், இங்குமாய் உலாவிய நிலையில், அவ்வழியாக சென்ற 5க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளது. இதனையடுத்து, அவர்களை அருகாமையில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு […]
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு !
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, […]
தென்காசி குற்றால அருவியில் குளிக்க தடை !
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் குற்றால பகுதிகளில் 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, நேற்று மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இரவும் பெய்த தொடர் மழையால் மற்ற அருவிகளான புலி அருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் […]
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை !
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்றும் சமீபத்தில் கோயிலில் நூறு டிராக்டருக்கும் மேல் மண் அள்ளப்பட்டது என்றும் இதனால் கோயில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றூம் இதனால், கோயில் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு நிதி ஒதுக்கியது என்றும் இந்த நிதி முறையாக […]