முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு -விவசாயிகள் மகிழ்ச்சி!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து124 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவில், முன்கூட்டியே தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே கேரளா – தமிழக மேற்கு தொடர்ச்சி […]
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு !
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வடகர்நாடக – கோவா கடலோர பகுதிகளுக்கு அருகில் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிவரும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 12 மணி நேரத்தில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும், அதற்கடுத்த 36 மணி […]
உலக சுகாதார உச்சி மாநாட்டை கலக்கி வரும் தமிழக இளைஞர் ஹரிச்சந்திரன் !
புது தில்லியில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார உச்சி மாநாடு பிராந்தியக் கூட்டத்தில் அடிமட்ட மக்களின் குரல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ்நாட்டின் ஹரிச்சந்திரன் செயல்பட்டு வருகிறார். உலக சுகாதார உச்சி மாநாடு பிராந்தியக் கூட்டம் 2025 வருகின்ற ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில், உலகளாவிய மற்றும் தேசியத் தலைவர்களை ஒன்றிணைத்து, மிகவும் அவசரமான சுகாதார சவால்களில் ஒன்றை குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான […]