தமிழகம் முழுவதும் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை துவக்கம் !

தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ளது. டிஜிட்டல் வாயிலாகவும் தங்களது பதிவுகளை பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முதல்முறை வாக்காளர்கள் யாவரும் இந்த உறுப்பினர் சேர்க்கையில் இணையும் வசதி உண்டு. 2026 தேர்தல் பணிகளை தற்போது தேமுதிக உறுப்பினர் சேர்க்கையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து, பல்வேறு கட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருகின்றது.மேலும், தற்போது இந்த உறுப்பினர் சேர்க்கையும் மக்கள் மத்தியில் நல்ல […]

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிப்பு !

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு சென்றிருந்த பிரதமர் மோடி கொழும்பிவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நாட்டின் அதிபர்அநுரா குமார திசநாயகேவை சந்தித்தார். அப்போது, மீனவர்கள் பிரச்னைகள் குறித்து இலங்கை அதிபரிடம் மோடி பேச்சு நடத்தினார். அதுமட்டுமின்றி, மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடி முன்வைத்தார். இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதம் நடத்தியதாக தெரிவித்தார். […]

தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் உயர்வு…இன்று முதல் அமல்!

தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கaச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்நிலையில், நள்ளிரவு முதல் […]