தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்!
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை […]
91ஆயிரத்தை தாண்டிய பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பம் !
பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 91 ஆயிரத்து 414 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 7ம் தேதி தொடக்கி தொடங்கப்பட்டது பொறியியல் படிப்புடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கியது. இதற்காக தனித்தனியாக வலைதளப் பக்கங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,25,345 சேர்க்கை இடங்கள் […]
விஜய பிரபாகரனை எதிர்பார்க்கும் தமிழக மக்கள் ..!
தமிழ் நாட்டின் அரசியல் தற்போது உள்ள சூழலில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு இளைஞராக விஜயபிரபாகரன் திகழ்ந்து வருகிறார் 2005 அரசியலில் தனது பயணத்தை துவங்கிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள்,தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் மாநில அரசியல் கட்சியை தமிழகத்தில் தொடங்கினார்.தொடர்ந்து 15 வருடங்களாக எதிர்கட்சிகளுக்கு பெரிய சவாலாக திகழ்ந்தார் . அதுமட்டுமின்றி,தமிழகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களில் அறிவிப்புகளும் ,நலத்திட்ட பணிகளும் ,அவரது செயல்பாடுகளும் மக்களால் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.2011 ஆம் ஆண்டு அனைத்திந்திய […]
ஏப்ரல் 23 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் !
தமிழகத்தில் ஏப்ரல் 23 வரை மிதமான மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால், இன்று முதல் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]
உலக சுகாதார உச்சி மாநாட்டை கலக்கி வரும் தமிழக இளைஞர் ஹரிச்சந்திரன் !
புது தில்லியில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார உச்சி மாநாடு பிராந்தியக் கூட்டத்தில் அடிமட்ட மக்களின் குரல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ்நாட்டின் ஹரிச்சந்திரன் செயல்பட்டு வருகிறார். உலக சுகாதார உச்சி மாநாடு பிராந்தியக் கூட்டம் 2025 வருகின்ற ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில், உலகளாவிய மற்றும் தேசியத் தலைவர்களை ஒன்றிணைத்து, மிகவும் அவசரமான சுகாதார சவால்களில் ஒன்றை குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான […]
தமிழகத்தில் 3 தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்க கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் […]
தமிழ்நாடு | நேற்று நள்ளிரவில் இருந்து மீன் பிடி தடைக்கலாம் அமல் !
தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால் மீன்களின் விலை கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை வங்கக்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும் மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் […]
“மோசடி முதலீட்டு வலைத்தளங்களை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” – தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!
பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகளைப் பயன்படுத்தி மோசடி முதலீட்டு வலைத்தளங்களை ஊக்குவிக்கும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகளைப் பயன்படுத்தி மோசடி முதலீட்டு வலைத்தளங்களை ஊக்குவிக்கும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களுக்கு தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரபலங்கள் பற்றிய பரபரப்பான தலைப்புச் செய்திகள் மற்றும் நன்கு அறியப்பட்ட செய்தி […]
தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் !
தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பநிலை உச்சத்தை தொடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் 13ம் தேதி முதல் […]
‘ஜிப்லி புகைப்படத்தால் தேவையில்லாமல் மோசடிகளில் சிக்க வேண்டாம்’-சைபர் குற்றப் பிரிவு எச்சரிக்கை !
ஜிப்லி புகைப்படங்களை பயண்படுத்தி தேவையில்லாமல் மோசடிகளில் சிக்க வேண்டாம் என்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவு எச்சரித்துள்ளது. இது குறித்து சைபர் குற்றப் பிரிவு வெளியிடப்பட்டிருக்கும் எச்சரிக்கையில், ஒரு பயனாளர், தான் எடுத்த செல்ஃபி அல்லது புகைப்படம், குழுப் புகைப்படங்களை செய்யறிவு தொழில்நுட்பத்தில் பதிவிட்டு, அதிலிருந்து ஜிப்லி புகைப்படங்களை பெறுகிறார். ஆனால், ஜிப்லி புகைப்படத்தைச் சுற்றி இருக்கும் அச்சுறுத்தல்களை பயனாளர்கள் மறந்துவிடுகிறார்கள் எனவும், ஒரு பயனாளர், செய்யறிவு தொழில்நுட்பத்தில், தனது புகைப்படத்தைப் பதிவு செய்யும்போது, அது […]