மின் கட்டணத்தை உயர்த்தும் தமிழ்நாடு அரசை கண்டித்து பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை!

மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதலாக நிதிச் சுமையை ஏற்படுத்துவதைக் கண்டித்து பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த அறிக்கையில் ”நேற்று இரவிலிருந்து மின் கட்டண உயர்வு செய்துள்ளனர் என்ற செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது உண்மையிலேயே கண்டிக்கத்தக்க ஒரு விஷயம். இது மொத்தமாக மக்களைப் பாதிக்கக் கூடிய ஒரு விஷயமா இருக்கும். எனவே அரசு மறு பரிசீலனை செய்து இந்த மின் கட்டண உயர்வைத் திரும்பப் […]

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் -தமிழ்நாடு அரசு !

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 16ம் தேதியன்று தமிழ்நாட்டின் 14 ஆயிரம் உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில் ஜூலை 1ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெற்றப்பட உள்ளன. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி விண்ணப்பத்துடன் குற்ற […]

மாநகராட்சி, நகராட்சிகளில் ஜாதிப் பெயரை நீக்க தமிழக அரசு உத்தரவு !

மாநகராட்சி, நகராட்சிகளில் 1,132 இடங்களில் உள்ள காலனி உள்ளிட்ட ஜாதிப் பெயரை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கெல்லாம் முன்னதாக சாலைகளின் பெயர்கள், தெருக்களின் பெயர்களில் இருந்த சாதிப் பின்னொட்டுப் பெயர்களை நீக்கி […]

“மகளிர் உரிமை தொகை கொடுத்துவிட்டு டாஸ்மார்க் மூலமாக எடுத்து கொள்கிறது தமிழ்நாடு அரசு” – பிரேமலதா விஜயகாந்த் குற்றசாட்டு !

மகளிர் உரிமைத்தொகை என ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் டாஸ்மார்க் மூலமாக 5000 ரூபாய் பறித்துக் கொள்கிறது தமிழக அரசு என பிரேமலதா விஜயகாந்த் குற்றம சாட்டியுள்ளார் . தேமுதிக சார்பில் மது ஒழிப்பு பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நகர செயலாளர் பரமஜோதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிகபொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசியவர்,ஆப்ரேஷன் செந்தூரில் பாகிஸ்தானை விரட்டிய ராணுவத்தினருக்கு நான் மிகப்பெரிய […]

“புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு கையெழுத்திடாததால்” நிதி ஒதுக்கப்படவில்லை -ஒன்றிய அரசு பதில் !

புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் அமைப்பின் நிர்வாகி ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க […]

10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

”ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது” என தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வாருகின்றார். மேலும், தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநர் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குகளைத் தொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக ஆளுநர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும், பல்கலைக்கழகங்களின் வேந்தர் […]