தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்பதால் நாளை நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை மறுநாள் நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை […]

உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா 3 நாட்களில் 2வது முறையாக வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் ஃப்ரீ ஸ்டைல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஃப்ரீ ஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர், ஒரு ஆண்டில் 5 கட்டங்களாக நடத்தப்படும். ஏற்கனவே 3 கட்டங்கள் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த நிலையில் 4வது கட்டமாக அமெரிக்காவில் நடந்து […]

தமிழ்நாட்டின் உரிமைக்காக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக குரல் எழுப்பும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் நிதி, மொழி, கல்வி உரிமை ஆகியவற்றுடன் இந்தியாவின் கூட்டாட்சி உரிமைக்காகவும் வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக குரல் எழுப்பும் என்று, திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் 21ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் எந்தவிதமான விவாதங்களை எழுப்ப […]

45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் -தமிழக அரசு அரசாணை வெளியீடு !

தமிழ்நாட்டில் உள்ள 45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ.130 கோடி ஒதுக்கி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 50 அரசு மருத்துவமனைகளில் சுமார் ரூ.160 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்தார். அதனடிப்படையில் முதல்கட்டமாக 45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது. இதில், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரியில் ஆகிய உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் […]

தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் புதிய எஸ்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விவேகானந்தா சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கையா நியமனம் […]

தமிழ்நாடு பள்ளிகளில் வகுப்பறைகளில் ‘ப’ வடிவ இருக்கை வசதியை அமல்படுத்த வேண்டும் -பள்ளிக்கல்வி துறை உத்தரவு!

மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், ஆசிரியர்-மாணவர் மற்றும் மாணவர்-மாணவர் தொடர்பை ஊக்குவிக்கவும், வகுப்பறைகளில் ‘ப’ வடிவ இருக்கை வசதியை அமல்படுத்துமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக பள்ளி வகுப்பறை வடிவமைப்பானது ஆசிரியர்களுக்கு நேராக வரிசையாக பெஞ்ச்கள் போடப்பட்டு இருக்கும். அதில் மாணவர்கள் வரிசையாக அமர்ந்து பாடங்களை கவனிப்பார்கள். இதில், உயரமான மாணவர்கள் கடைசி பெஞ்சிலும், உயரம் குறைந்த மாணவர்கள் முதல் பெஞ்சிலும் அமர்வது பொதுவான ஒன்றாகும். இந்நிலையில், மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், ஆசிரியர்-மாணவர் மற்றும் மாணவர்-மாணவர் தொடர்பை […]

தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்லது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ […]

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசிதழில் வெளியீடு !

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. 8 முதல்நிலை பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. 3 முதல்நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. அதன்படி கோவையின் சாத்தான்குளம், ஒத்தக்கல் மண்டபம், சேலம் பி.என். பட்டி, திருவள்ளூரில் திருமழிசை, தஞ்சாவூரில் பேராவூரணி, ஈரோட்டில் நம்பியூர், மதுரையில் வாடிப்பட்டி, கிருஷ்ணகிரியில் […]

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்து குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 5 முதல் 8-ஆம் தேதிவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் […]

தமிழகத்தில் நாளை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமா தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 3 மற்றும் 4-ஆம் […]