நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் தொடக்கம் !

கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த 2023 அக்டோபா் முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. சுபம் என்ற தனியார் நிறுவனம் மூலம் ‘சிவகங்கை’பயணிகள் கப்பல் சனிக்கிழமைகளை தவிர மற்ற நாள்களில் இயக்கப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், கடல் சீற்றம் மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை […]

முத்தரப்பு ஒருநாள் இறுதிப்போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி !

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் விளையாடின. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 […]