அரசு தொலைக்காட்சி நிலையத்தின்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு !

ஈரானில், செய்தி நேரலையின்போது அரசு தொலைக்காட்சி நிலையத்தின்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று இரவு, இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் அரசு தொலைக்காட்சி தலைமையகம் கடும் சேதமடைந்தது. இந்தத் தாக்குதல் நேரடி செய்தி ஒளிபரப்பின்போது நிகழ்ந்தது. வெடிப்புச் சம்பவமும், நேரலையில் பேசிக்கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் மேடையில் இருந்து இறங்கி பாதுகாப்புக்காக வெளியேறினார். தாக்குதலுக்குப் பிறகு கட்டிடம் இடிந்து […]