தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு !

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில், திமுக சார்பில் […]

மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள் -பிரேமலதா விஜயகாந்த்!

‘மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள்’ என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் சாதக, பாதகங்களை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இதில் தேமுதிக நிலைப்பாடு என்ன என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் கூறிய அவர், சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக […]