ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பழவேற்காட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற படகுப் போட்டி !

ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி பழவேற்காட்டில் நடைபெற்ற படகுப் போட்டியில் முதல் பரிசு வென்றவருக்கு 1 லட்ச ரூபாய் ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, பாரத் ஒற்றுமை படகு போட்டி நடைபெற்றது. பழவேற்காடு சுற்றுப்பகுதிகளில் உள்ள மீனவ கிராம மக்கள் இந்த படகு போட்டியில் கலந்து கொண்டனர். இந்தப் படகுப் போட்டியை, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், பொன்னேரி […]

மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை விரைவில் வழங்க வேண்டும் -பிரதமா் மோடிக்கு, ராகுல் காந்தி கடிதம் !

பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் விளிம்புநிலை சமூகங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் நிலவும் தாமதத்தை சரிசெய்ய வேண்டும் என பிரதமா் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுளள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த 90% மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்குத் தடையாக உள்ள இரண்டு முக்கியப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்றும் முதலாவதாக, தலித், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் […]