இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிப்பு !
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு சென்றிருந்த பிரதமர் மோடி கொழும்பிவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நாட்டின் அதிபர்அநுரா குமார திசநாயகேவை சந்தித்தார். அப்போது, மீனவர்கள் பிரச்னைகள் குறித்து இலங்கை அதிபரிடம் மோடி பேச்சு நடத்தினார். அதுமட்டுமின்றி, மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடி முன்வைத்தார். இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதம் நடத்தியதாக தெரிவித்தார். […]
பிரதமர் மோடிக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை !
பாம்பன் ரயில்வே பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடிக்கு ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சிங்கை ஜின்னா கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில்வே பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப் துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விடுத்த அறிவுறுத்தலின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சிங்கை ஜின்னா வேண்டுகோள் விடுத்துள்ளார். […]
பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்த பிரேமலதா விஜயகாந்த் !
ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வந்த புதிய பாம்பன் பலத்திற்கு A.P.J.அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். தேசியா முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக சற்றுமுன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டவுள்ளார்.அந்த அறிக்கையில் ,“ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு பலமாகும். இந்த நிலையில்,ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வந்த புதிய ரயில் பாலத்தின் பணிகள் முடிவாடைந்துள்ளது.பாம்பன் பாலத்தை பிரதமர் […]