ஜி7 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி !
ஜி7 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, உலகளாவிய முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம் என உலகத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் கடந்த […]
பிரதமர் மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் விருது வழங்கி கவுரவிப்பு !
பிரதமர் மோடிக்கு, சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாடுகள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். முதல் கட்டமாக சைப்ரஸ் நாட்டுக்கு சென்ற அவர், தலைநகர் நிகோசியாவ்வுக்குச் சென்றடைந்தார். அங்குள்ள விமான நிலையத்திற்கு வந்த சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோ டவுலிட்ஸ் பிரதமர் மோடியை வரவேற்றார். அதைத் தொடர்ந்து லிமாசோலில் நடைபெற்ற தொழிலதிபர்கள் மாநாட்டில் பிரதமர் மோடியும் சைப்ரஸ் […]
அகமதாபாத் விமான விபத்தை நேரில் சென்று ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி!
அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான விமானத்தை பார்வையிட பிரதமர் மோடி இன்று நேரில் செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் இருந்து நேற்று மதியம் 1.38 மணிக்கு புறப்பட்டு லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை சென்றடைவதுதான் விமானத்தின் பயணத்திட்டம். மேலும், இந்த விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 230 பயணிகள், விமானி சுமித் சபர்வால், துணை விமானி கிளைவ் குந்தர், பணியாளர்கள் 10 பேர்,பயணிகளில் […]
மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை விரைவில் வழங்க வேண்டும் -பிரதமா் மோடிக்கு, ராகுல் காந்தி கடிதம் !
பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் விளிம்புநிலை சமூகங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் நிலவும் தாமதத்தை சரிசெய்ய வேண்டும் என பிரதமா் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுளள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த 90% மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்குத் தடையாக உள்ள இரண்டு முக்கியப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்றும் முதலாவதாக, தலித், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் […]
உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை இன்று திறந்துவைத்தார் பிரதமர் மோடி !
காஷ்மீரில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து திறந்துவைத்துள்ளார். காஷ்மீா் பகுதிக்கு நேரடி ரயில் போக்குவரத்தை அளிக்கும் உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டத்தின் நிறைவாக, கத்ரா-ஸ்ரீநகா் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்கிறார். அதோடு, உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தையும் பிரதமர் மோடி இன்று திறந்துவைத்துள்ளார். சுமார் ரூ.46,000 கோடி மதிப்புள்ள வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ள பிரதமா் மோடி, பாகிஸ்தானுக்கு […]
நிதி ஆயோக் கூட்டத்திற்குப் பிறகு இன்று பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் !
டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்திற்குப் பிறகு இன்று மாலை பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். டெல்லி ஜன்பத்தில் உள்ள இந்த சந்திப்பின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உடனிருந்தார். இந்த சந்திப்பு குறித்து, முதலமைச்சர் […]
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது – பிரதமர் மோடி!
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது என பிரதமர் மோடி உறுதியாகத் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த போர் குறித்தும், அந்த போர் திடீரென நிறுத்தப்பட்டது குறித்தும், பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது என சிந்து நதி நீர் குறித்து பிரதமர் மோடி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் […]
முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை !
நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், முப்படைத் தளபதி அனில் செளஹான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பாகிஸ்தான் விவகாரத்தில் முப்படைகள் மேற்கொள்ள […]
சில மணிநேரத்திலே பழுதான பாம்பன் ரயில் பாலம் !
பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் சில மணி நேரத்திலேயே பழுதானது பேசுபொருளாகியுள்ளது. பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் நேற்று 544 கோடி மதிப்பீட்டில் 2.08 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இந்த புதிய பாம்பன் ரயில் பாலம் ஹைட்ராலிக் முறையில் இயங்குகிறது. இந்தப் புதிய ரயில் பாலம் வழியாக கப்பல் செல்லும்போது, செங்குத்தான நிலையில் 24 கயிறுகளைக் கொண்டு பாலம் தூக்கப்படுகிறது. இந்நிலையில், செங்குத்து தூக்கு […]
பாம்பன் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு !
ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இன்று தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இன்று தொடங்கி வைத்தார். ராமேஸ்வரத்தில் ரூ.535 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை, ராம நவமி தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கையெழுத்தையாவது தமிழ் மொழியில் போடக்கூடாதா?” எனக் […]