- Home
- Premalatha Vijayakanth
- July 14, 2025
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவிற்கு பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்!
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் மறைவிற்கு பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் செய்தி வெளியிலுள்ளார் . அந்த அறிக்கையில் ”பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர். கேப்டனுடன் இணைந்து பொன்மனச் செல்வன் திரைப்படத்தில் அம்மாவாக நடித்தவர். அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக் கூடியவர். கலை உலகில் அரசியாக வாழ்ந்தவர். அவரது இழப்பு திரை உலகிற்கே ஈடு இணையே இல்லாத இழப்பு, அவர் […]
- July 2, 2025
மின் கட்டணத்தை உயர்த்தும் தமிழ்நாடு அரசை கண்டித்து பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை!
மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதலாக நிதிச் சுமையை ஏற்படுத்துவதைக் கண்டித்து பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த அறிக்கையில் ”நேற்று இரவிலிருந்து மின் கட்டண உயர்வு செய்துள்ளனர் என்ற செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது உண்மையிலேயே கண்டிக்கத்தக்க ஒரு விஷயம். இது மொத்தமாக மக்களைப் பாதிக்கக் கூடிய ஒரு விஷயமா இருக்கும். எனவே அரசு மறு பரிசீலனை செய்து இந்த மின் கட்டண உயர்வைத் திரும்பப் […]
- May 29, 2025
மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள் -பிரேமலதா விஜயகாந்த்!
‘மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள்’ என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் சாதக, பாதகங்களை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இதில் தேமுதிக நிலைப்பாடு என்ன என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் கூறிய அவர், சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக […]
- May 29, 2025
“மகளிர் உரிமை தொகை கொடுத்துவிட்டு டாஸ்மார்க் மூலமாக எடுத்து கொள்கிறது தமிழ்நாடு அரசு” – பிரேமலதா விஜயகாந்த் குற்றசாட்டு !
மகளிர் உரிமைத்தொகை என ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் டாஸ்மார்க் மூலமாக 5000 ரூபாய் பறித்துக் கொள்கிறது தமிழக அரசு என பிரேமலதா விஜயகாந்த் குற்றம சாட்டியுள்ளார் . தேமுதிக சார்பில் மது ஒழிப்பு பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நகர செயலாளர் பரமஜோதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிகபொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசியவர்,ஆப்ரேஷன் செந்தூரில் பாகிஸ்தானை விரட்டிய ராணுவத்தினருக்கு நான் மிகப்பெரிய […]
- May 22, 2025
முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம் | சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ள பிரேமலதா விஜயகாந்த்!
பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஸ்டாலின் டெல்லி பயணம் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.இந்தநிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த பயணத்தை குறித்து பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் . 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கின்றார்.அது ஒருபுறம் இருக்க திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர்கள் மட்டுமே நிதி […]
- April 22, 2025
உலக பூமி தினத்தை முன்னிட்டு பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை !
உலக பூமி தினம் (ஏப்ரல் 22 ) முன்னிட்டு சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ”இன்று உலக பூமி தினம். இந்த பூமி நம் அனைவரையும் தாங்கி வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இத்தனை கோடி மக்களின் வாழ்வுக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கிறது. இன்றைக்கு நாம் காணும் நிலத்தடி நீர் மாசு, காற்று மாசு, எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிப்பது, குளங்களில் சாக்கடை நீர் கலப்பது, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரசாயன நீர் போன்றவை […]
- April 18, 2025
அச்சத்தோடு இருக்கும் பெண்களை ஆதரிக்க பிறந்தவள் பிரேமலதா விஜயகாந்த் – தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழாரம் !
தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்திய அரசியளிலும் அசைக்க முடியாத பெண் சக்தி பிரேமலதா விஜயகாந்த் என தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெல்லை கண்ணன் ஐய்யா அவர்கள் இந்திய இலக்கிய வரலாற்றில் தமிழ்க்கடல், பேச்சாளர் , பட்டிமன்ற நடுவர் போன்ற பல்வேறு புகழுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவர்.இவர் 2019 இந்தியக் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி சார்பாக மேலப்பாளையத்தில் (திருநெல்வேலி) ,நடைபெற்ற மாநாட்டில் பேசி […]
- April 18, 2025
நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல் !
நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி சற்றுமுன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,”கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நெசவுத் தொழிலை சார்ந்திருக்கும் சிறு, குறு தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும் வரும் மே 19ஆம் தேதி மீண்டும் நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது. மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப […]
- April 17, 2025
கவனம் பெற்று வரும் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை !
தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில் மக்களிடையில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ளது. டிஜிட்டல் வாயிலாகவும் தங்களது பதிவுகளை பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த உறுப்பினர் சேர்க்கை இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, முதல்முறை வாக்காளர்கள்,பெண்கள் மற்றும் இளைஞர்கள் யாவரும் உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2026 தேர்தல் பணிகளை தற்போது தேமுதிக உறுப்பினர் சேர்க்கை துவங்கிய ஒரு […]
- April 16, 2025
உயர் நீதிமன்ற உத்தரவை என்எல்சி உடனடியாக அமல்படுத்த வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் !
உயர் நீதிமன்ற உத்தரவை என்எல்சி நிர்வாகம் உடனடியாக அமல்படுத்த வேண்டி சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் தலைசிறந்த நிறுவனமான என்எல்சி நிறுவனம், ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டக்கூடிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை இந்த நிறுவனத்திற்கு ஒப்படைத்ததன் காரணமாக, விரிவாக்கம் செய்து உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களில் 60% தொழிலாளர்கள் […]