மேட்டூர் அணையின் நீர் வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு !

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 75 ஆயிரம் கன அடியில் இருந்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நடப்பாண்டில் ஐந்தாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 75,000 கன […]

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு -அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்வு !

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வரும் காரணமாக அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பும் தருவாயை எட்டியதை அடுத்து பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 60 […]