சட்டமன்ற கூட்டத் தொடரில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த மராட்டிய அமைச்சர் மாணிக் ராவ் !

மராட்டியத்தில் சட்டமன்ற கூட்டத் தொடரில் அம்மாநில வேளாண் துறை அமைச்சராக உள்ள மாணிக் ராவ் கோகடே செல்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தது சர்ச்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியத்தில் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பாஜக, ஷிண்டே பிரிவு சிவசேனா, அஜித் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் ஆகிய கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா கட்சி இரண்டாக பிளவுப்பட்டு ஷிண்டே அணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு வைக்கிறது. உத்தவ் தாக்கரே அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது. […]

மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிப்பதை கைவிடுவதாக பாஜக அரசு அறிவிப்பு !

மகாராஷ்டிராவில் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, இந்தி மொழி திணிப்பதை கைவிடுவதாக பாஜக அரசு அறிவித்துள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி மகாராஷ்டிராவில் ஆங்கிலம் மற்றும் மராத்தி வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்தி விருப்ப மொழியாக மட்டுமே கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், இந்தி […]

ரயில் பெட்டிகளில் தானியங்கிக் கதவுகள் பொருத்த ரயில்வே துறை முடிவு !

புதிதாக தயாரிக்கப்படும் புறநகர் ரயில் பெட்டிகளில் தானியங்கிக் கதவுகளை பொருத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே ரயில் நிலையத்தில் இருந்து மும்பை ரயில் நிலையத்துக்கு புறநகர் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகமான கூட்டம் காரணமாக படிக்கட்டுகளில் அதிக அளவிலான பயணிகள் தொங்கியபடி பயணம் செய்தனர். தானேயை அடுத்த திவா மற்றும் கோபர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டுகளில் தொங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்தனர். படுகாயத்துடன் […]