திருபுவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு -உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி !

திருபுவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீசார் கைது செய்யப்பட்டு […]

சாகசத்திற்காக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

சாகசத்திற்காக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கூட்ட நெருக்கடியால் மாணவ மாணவியர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் காட்சிகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காணலாம் என்றும், சில நேரங்களில் விபத்துகளால் மாணவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளதாகவும், ஆகவே, மாணவ மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதி […]