மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளை கடித்த வெறிநாய்!

மதுரையில் மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் வெறிநாய்க் கடித்து ஐந்து மாணவிகள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் கோரிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனிடையே கல்லூரி வளாகத்திற்குள் ஏராளமான நாய்கள் சுற்றி திரிவதாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாநகராட்சிக்கு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்திற்குள் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று கல்லூரி வளாகத்தில் […]

கீழடி அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகள் -தமிழர்களின் முகங்கள் மறுவடிவமைப்பு !

கீழடி அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் மறுவடிவமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம், கீழடி அருகே உள்ள கொந்தகையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மண் பானை, பகடைக்காய், உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தும் கல்லால் ஆன கருவி உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டன. குறிப்பாக, முதுமக்கள் தாழியும் அதன் உட்பகுதியில் மனித எலும்புக்கூடுகளும் கிடைத்தன. அவை 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், மதுரை காமராஜர் […]

மதுரையில் ஓட்டுநரை செருப்பால் அடித்து உதவி மேலாளர் பணியிட நீக்கம் !

மதுரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநரை செருப்பால் அடித்து உதவி மேலாளர் பணியிட நீக்கம் செய்யப்பட்டார். மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பக்ரீத் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக பயணிகள் ஏராளமானோர் அரசு பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர். அப்போது மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே பயணிகளை ஏற்றியவாறு நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து […]

மதுரை அப்போலோ மருத்துவமனையில் தொடங்கியது வாய்ப் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் !

புற்றுநோய் பாதிப்புகளை குறைப்பதற்கான புதிய முயற்சியாக மதுரையில் உள்ள அப்போலோ கேன்சர் மையம், வாய்ப் புற்றுநோய் பரிசோதனைத் திட்டத்தை தொடங்கியுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, வாய்ப் புற்றுநோயை ஆரம்பகாலத்திலேயே கண்டறிவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், புகையிலை பயன்பாட்டின் உடல்நல பாதிப்புகளையும் அதன் தாக்கத்தையும் எடுத்துரைக்கும் பிரச்சாரத்தை மதுரை அப்போலோ மருத்துவமனை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய அந்த மருத்துவமனையின் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். கே. பாலு மகேந்திரா, டாக்டர் ஜி. சதீஷ் சீனிவாசன் […]

மதுரை சித்திரை திருவிழா….கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு கோலாகலம் !

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா, கோலாகலமாக நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக, தெற்கு மாசி வீதி அருள்மிகு வீரராகவப் பெருமாள் வெள்ளிக் […]

மதுரை | பிரபல தொழிலதிபர் கடத்தல் வழக்கில் ஈடுபட்டுள்ள 6 பேர் கைது !

மதுரையில் தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் ஆறு பேரை மதுரை போலீசார் மத்திய சிறையில் அடைத்தனர். மதுரையில் வசித்து வருபவர் பிரபல தொழிலதிபர் சுந்தர்.இவர் கடந்த 14 ஆம் தேதி கடத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தொழிலதிபரை தேடி வருகின்றனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் 9 பேரை பிடித்து விசாரணை செய்து வந்தனர். அதில், மயிலாடுதுறையைச் சேர்ந்த மரியராஜ் உட்பட 6 பேரை கைது செய்து மதுரை […]

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி – அதிரடி காட்டும் மாடுபிடி வீரர்கள் !

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 ஜல்லிக்கட்டு காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். விறுவிறுப்பாக […]

மதுரையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டர் – அதிரடி காட்டும் போலீசார் !

மதுரையில் ரவுடி சுபாஷ் சந்திர போஸ் போலீசின் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மதுரையில் கிளாமர் காளி என்பவர் கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக் காளியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு கடந்த 29ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியாக கருதப்பட்ட ரவுடி சுபாஷ் சந்திர போஸை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காரில் சென்ற சுபாஷ் சந்திரபோஸ், மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகே […]