கேரள கடற்கரையில் மூன்றாவது நாளாக தீப்பற்றி எரிந்து வரும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் !

கேரள கடற்கரையில், சிங்கப்பூருக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று மூன்றாவது நாளாக தீப்பற்றி எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலான எம்வி வான் ஹை 503, கொழும்பில் இருந்து புறப்பட்டு மும்பைக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் கேரளாவின் பேப்பூர் கடற்கரையில் இருந்து சுமார் 78 கடல் மைல் தொலைவில் இருந்தபோது திடீரென தீ பிடித்துள்ளது. இது குறித்த தகவல் இந்திய கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஐஎன்எஸ் சூரத் கப்பல் சம்பவ […]

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு -விவசாயிகள் மகிழ்ச்சி!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து124 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவில், முன்கூட்டியே தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே கேரளா – தமிழக மேற்கு தொடர்ச்சி […]

மூணாறில் வளர்ப்பு நாயை சிறுத்தை தூக்கி சென்ற சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி !

மூணாறில் வீட்டின் அருகே தூங்கிக் கொண்டிருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை தூக்கி சென்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள தேவிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வளர்ப்பு நாய் காணாமல் போயுள்ளது. அதனைதொடர்ந்து வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் நேற்று அதிகாலை, சிறுத்தை ஒன்று, வீட்டுக்கு அருகே உறங்கிக் கொண்டிருந்த நாயை […]