இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமை -மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் !Justice Center
மக்களின் வாழ்த்துகளுடன் உறுதிமொழி எடுக்கவுள்ளேன் இது இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமை என்று, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், காலியாகும் இடங்களுக்கான தோ்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதில் திமுக, அதிமுக முன்னுறுத்திய ஆறு வேட்பாளா்களும் போட்டியின்றி தோ்வாகினா். இதில், திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த […]
நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்ற கமல்ஹாசன்!
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ள கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கன்னட மொழி குறித்த அறிக்கைகளை வெளியிட கமலஹாசனுக்கு தடை -பெங்களூரு நீதிமன்றம் !
கன்னட மொழி குறித்த அறிக்கைகளை வெளியிட கமலஹாசனுக்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமல் கருத்தைக் கண்டித்து கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன. கன்னட மக்களின் உணர்ச்சிகளை கமலின் பேச்சு புண்படுத்துவதாக கர்நாடக நீதிமன்றத்தில் கன்னட அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த […]