அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பு !

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியவேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில், 221 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தொற்று வராமல் தடுக்க கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், கர்ப்பிணிகள், உடல்வலி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடி சிகிச்சை […]

தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களில் 7,500 பேருக்கு டெங்கு காய்ச்சலால்-சுகாதாரத்துறை அறிவிப்பு !

தமிழகத்தில், கடந்த ஐந்து மாதங்களில் 7,500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ்எஜிப்ட் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களைப் பரப்பி வருகின்றன. இதையடுத்து மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். […]