கோயில் விழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம்!

கோயில் விழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கோயில் வழக்கப்படி தனது குடும்பத்தினர் தலைமையில் சுவாமி ஊர்வலம் நடத்தப்படும் என்றும் தங்கள் குடும்பத்தினருக்குதான் முதல் மரியாதை வழங்கப்படும் என்றும், அந்த வகையில் ஈரோடு பர்கூரில் உள்ள பந்தீஸ்வரர் கோயில் மகா பெரிய குண்டம் விழாவில் தனக்கு முதல் மரியாதை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். […]