தமிழ்நாட்டின் உரிமைக்காக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக குரல் எழுப்பும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் நிதி, மொழி, கல்வி உரிமை ஆகியவற்றுடன் இந்தியாவின் கூட்டாட்சி உரிமைக்காகவும் வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக குரல் எழுப்பும் என்று, திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் 21ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் எந்தவிதமான விவாதங்களை எழுப்ப […]

15-ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை வரும் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கவுள்ளார். இத்திட்டத்தின் கீழ் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன என்றும் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்றும் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களுக்கு வரும் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படும் என்றும் இந்த முகாம்களில் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

வா.மு. சேதுராமன் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி !

வா.மு. சேதுராமன் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மூத்த தமிழறிஞர் வா.மு. சேதுராமன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் வா.மு சேதுராமன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், நூறுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட […]

விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் நிவாரணம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயை நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான […]

எதிர்காலத்துக்கான திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு ஸ்டைல் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் !

இந்தியாவின் எதிர்காலத்துக்கான திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு ஸ்டைல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் சென்று சேர்க்கும் ஊழியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் புதிய வசதிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. முதல்கட்டமாக சென்னை அண்ணா நகரில் உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கென பிரத்யேக குளிர்சாதன காத்திருப்பு அறை, கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். […]

நிதி ஆயோக் கூட்டத்திற்குப் பிறகு இன்று பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் !

டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்திற்குப் பிறகு இன்று மாலை பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். டெல்லி ஜன்பத்தில் உள்ள இந்த சந்திப்பின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உடனிருந்தார். இந்த சந்திப்பு குறித்து, முதலமைச்சர் […]