தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் 3 டிகிரி அதிகரிக்க கூடும் – சென்னை வானிலை மையம்!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் […]

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் !

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியைச் சேர்ந்த மணி என்ற முதியவர், வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுவதால், அதனை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. […]

சென்னையில் அரசு பேருந்து மோதி ஐ.டி ஊழியர் உயிரிழப்பு !

தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மோதிய விபத்தில் ஐ.டி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐ.டி ஊழியரான மதியழகன். இவர், கூடுவாஞ்சேரியில் தனது நண்பர்களுடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்,நேற்று இரவு தாம்பரம் அடுத்த இரும்புலியூர் சிகனல் அருகே தனது பைக்கில் மதியழகன் சென்று கொண்டிருந்த போது தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த மதியழகன் மீது […]

ஏப்ரல் 23 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் ஏப்ரல் 23 வரை மிதமான மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால், இன்று முதல் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

தங்கத்தின் விலை குறைவு – தங்கம் வாங்க சரியான நேரம் இது தான் !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரணுக்கு 200 ரூபாய் குறைந்து 66 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், கடந்த வாரம் இறுதியில் எதிர்பாராத வகையில் அதிரடியாக குறைந்தது. அந்தவகையில், வாரத்தின் தொடக்க நாளான இன்றும் தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத்த தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 8 ஆயிரத்து 285 ரூபாய்க்கும், சவரனுக்கு […]

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !

கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை முதல் […]

அம்பத்தூரில் மாடு முட்டி முதியவர் காயம் – சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு !

அம்பத்தூரில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி தூக்கிய பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சென்னை அம்பத்தூர் பிரித்திவிப்பாக்கம் பிரதான சாலை அப்பர் கெனால் தெரு அருகே சாலையில் சுற்றித்திரிந்த பசுமாட்டிற்கு பெண்மணி ஒருவர் தண்ணீர் வைத்த நிலையில், தண்ணீரை குடித்துவிட்டு சாலையில் நடந்து சென்ற முனுசாமி என்பவரை தூக்கி வீசியுள்ளது. இதுதொடர்பான, சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் பொற்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என […]

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

ஆன்லைன் விளையாட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பதில் !

ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கிறார் என்பதை ஏற்க முடியாது என, ஆன்லைன் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட விதிகளை எதிர்த்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், வர்த்தக உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள தமிழக அரசின் புதிய விதிகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. […]