10 ஆண்டுகளில் சென்னை மெட்ரோ ரயில்களில் 30 கோடிப் போ் பயணம்!
சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த 10 ஆண்டுகளில் 30 கோடிப் போ் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள இந்த மெட்ரோ ரயிலில், பயணம் செய்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவை, விமான நிலையம் – விம்கோ நகா், சென்ட்ரல் – பரங்கிமலை இடையே 2 […]
அரசுக் காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி!
சிட்லபாக்கம் அரசுக் காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிக்கு, அங்குள்ள காவலாளி, பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, சிட்லப்பாக்கத்தில் செயல்படும் அரசு பெண்கள் காப்பகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். தந்தை இழந்த நிலையில், 8ம் வகுப்புப் படித்து வரும் அவர், காலில் காயங்களுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையின் விசாரணையில், இரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த காவலாளி தன்னிடம் தகாத முறையில் […]
சென்னையில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில் ஒப்பந்தம் !
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 இரயில் பெட்டிகளை கொண்ட 32 மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் Alstom Transport India நிறுவனத்திற்கு ரூ.1,538.35 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் கடந்த ஏப்ரல் மாதம் அன்று Alstom Transport India நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வுமையம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 10-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இன்று நாளையும் […]
திருவான்மியூரில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் திருட முயன்ற வடமாநிலத்தவர்கள் கைது !
சென்னை திருவான்மியூரில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் முறைகேடாக பணத்தை திருட முயன்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங், பிரிட்ஜ் பான், ஸ்மித் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, திருவான்மியூர் திருவள்ளூர் நகரில் அமைந்துள்ள எஸ்பிஐ ஏடிஎம் ஒன்றில், மர்மமான முறையில் பணம் எடுக்கப்பட்டு வருவதாக எஸ்பிஐ நிறுவனத்தை சார்ந்தவர்கள் புகார் அளித்தனர். திருவான்மியூரில் அமைந்துள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரும் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கருப்பு நிற அட்டையை […]
அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் !
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. அந்தவகையில், கடந்த 3 நாட்களாக உயர்ந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 950 […]
70 லட்சம் மதிப்பிலான கஞ்சா போதை பொருட்களை தீயில் எரித்து அழிப்பு !
தாம்பரம் மாநகர காவல்துறையால் கைப்பற்றப்பட்ட 70 லட்சம் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எரித்து அழி க்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் ஜி.ஜே. மல்டிகிளேவ் எனும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனம் உள்ளது. இங்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன. தாம்பரம் மாநகர ஆணையர் அபின் தினேஷ் மொதக் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையர் மகேஸ்வரியின் தலைமையில், […]
துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்திற்கு இடைக்கால தடை-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !
தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் […]
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!
ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை தஞ்சை, திருவாரூர், […]
சென்னையில் தடம்புரண்ட மின்சார ரயிலால் பயணிகள் அதிர்ச்சி !
ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி வந்துகொண்டிருந்த மின்சார ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னை ராயபுரம் அருகே ஆவடியில் இருந்து புறநகர் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, சென்னை கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 3வது பெட்டியில் இரண்டு ஜோடி சக்கரம் தடம்புரண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ […]