அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் -சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி !
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? என்று ஜூலை 21ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது, உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் […]
கோயில் விழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம்!
கோயில் விழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கோயில் வழக்கப்படி தனது குடும்பத்தினர் தலைமையில் சுவாமி ஊர்வலம் நடத்தப்படும் என்றும் தங்கள் குடும்பத்தினருக்குதான் முதல் மரியாதை வழங்கப்படும் என்றும், அந்த வகையில் ஈரோடு பர்கூரில் உள்ள பந்தீஸ்வரர் கோயில் மகா பெரிய குண்டம் விழாவில் தனக்கு முதல் மரியாதை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். […]
முதியோர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை-சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை !
முதியோர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது. மதுரையைச் சோ்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழகத்தில் முதியோர்களை பொது இடங்களில் தனித்து விட்டுச் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது எனவும் இதுபோன்று விடப்படும் முதியோர்கள் சுகாதாரக் குறைபாடுகளால் உடல் நலம் குன்றி, மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா் எனவும் தேசிய முதியோர் மையங்களை அமைப்பது தொடா்பாக ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆனால், எந்த மாவட்டத்திலும் இந்த […]
தமிழகத்திற்கு 25% இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன் ?சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
ஆர்டிஇ சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீடு இடங்களுக்கு, தமிழகத்துக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 25% இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாரயணன் அமர்வு முன் நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், […]
பாலியல் வழக்கு |மதபோதகர் ஜான் ஜெபராஜ் நிபந்தனை ஜாமின்வழங்கியது -சென்னை உயர்நீதிமன்றம்!
பாலியல் வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜ் க்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ் என்பவர் கோவை கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தின் மதபோதகராக இருந்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் ஜான் ஜெபராஜ் வீட்டில் ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது,நிகழ்ச்சிக்கு வந்த 17 […]