காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு…சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை!
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர், அஜித்குமார் . பேராசிரியை நிகிதா என்பவர் தனது நகை மாயமானதாக அளித்த புகாரின் பேரில் மானாமதுரை தனிப்படை போலீசார் அஜித்குமாரை கொடூரமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படை போலீசார் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய […]
அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் !
சிவகங்கை அருகே காவல்துறை விசாரணையின் போது இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், நகை திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் போலீசாரால் விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையின் போது அஜித்குமார் மரணமடைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அஜித்குமார் மரணம் தொடர்பாக 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் 5 போலீசார் […]
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு ஆவணங்களை நாளை சமர்ப்பிக்க வேண்டும் -நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு !
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நாளை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், நகை திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் போலீசாரால் விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையின் போது அஜித்குமார் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி மரியா கிளாட்அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, […]