விருதுநகரில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து – மாவட்ட நிர்வாகம் அதிரடி !
விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெடி விபத்துக்களை தடுக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வெடி விபத்து கூட நடக்க கூடாது என்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் 10 நாட்களுக்குள் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு […]
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் பலி !
சிவகாசி அருகே நாரணாபுரம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஆண்டியாபுரம் பகுதியில் ஶ்ரீ மாரியம்மன் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், வழக்கம்போல் […]
விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் நிவாரணம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயை நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான […]
அருப்புக்கோட்டையில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த கணவரால் பரபரப்பு !
குடும்பத்தகராறில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கணவன் வெட்டிக்கொன்ற சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு. விவசாயியான இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், ஜெயதுர்கா, ஜெயலெட்சுமி என 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக, சுந்தரவேலு தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதன் பின்னர் காவல் நிலையத்திற்கு சென்ற சுந்தரவேலு, தன்னுடைய […]
விருதுநகர் | இரண்டு இருசக்கர வாகனம்நேருக்கு நேர் மோதி இருவர் பலி !
அருப்புக்கோட்டையில் எதிரே வந்த வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானத்தில் இருவர் பலியாகியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல். இவருக்கு வயது 23. காரியாபட்டியில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர், இன்று காலை, புதிய இருசக்கர வாகனத்தை டெலிவரி செய்ய அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக காரியாபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது […]
விருதுநகர்| ராட்டினத்தில் இருந்து பெண் கீழே விழுந்து விபத்து !
விருதுநகரில் ராட்டினத்தில் இருந்து திடீரென பெண் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்குனி பொங்கலையொட்டி, விருதுநகரில் தனியார் பள்ளியில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பொருட்காட்சிக்கு சென்ற கவுசல்யா என்பவர் அங்குள்ள ராட்டினத்தில் சுற்றியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, கவுசல்யா திடீரென தவறி விழுந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவரை பொருட்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் மீட்டு பொருட்காட்சியில் தயார் நிலையில் இருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ராட்டினம் […]