பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம்!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதன்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகாரில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். […]

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் !

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியைச் சேர்ந்த மணி என்ற முதியவர், வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுவதால், அதனை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. […]