பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் !

பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ள திட்டங்கள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ரூ.1,853 கோடி ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், ராமநாதபுரம் – தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க திட்ட […]

ராமநாதபுரத்தில் பெண்குழந்தை கழுத்தை அறுத்து கொலை -ஒருவர் கைது !

பரமக்குடி அருகே, இரண்டு வயது பெண் குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த உறவினரை காவல்துறையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த எமனேஸ்வரம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் தேசிங்கு. இவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி டெய்சி. இவர்களது பெண் குழந்தை லெமோரியாவுக்கு இரண்டரை வயதாகிறது. இவர்களது உறவினர் வடிவேல் மகன் சஞ்சய், அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை குழந்தை லெமோரியாவை சஞ்சய் அப்பகுதியிலுள்ள […]

பாம்பன் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு !

ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இன்று தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இன்று தொடங்கி வைத்தார். ராமேஸ்வரத்தில் ரூ.535 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை, ராம நவமி தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கையெழுத்தையாவது தமிழ் மொழியில் போடக்கூடாதா?” எனக் […]

பிரதமர் மோடிக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை !

பாம்பன் ரயில்வே பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடிக்கு ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சிங்கை ஜின்னா கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில்வே பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப் துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விடுத்த அறிவுறுத்தலின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சிங்கை ஜின்னா வேண்டுகோள் விடுத்துள்ளார். […]