சட்டமன்ற கூட்டத் தொடரில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த மராட்டிய அமைச்சர் மாணிக் ராவ் !

மராட்டியத்தில் சட்டமன்ற கூட்டத் தொடரில் அம்மாநில வேளாண் துறை அமைச்சராக உள்ள மாணிக் ராவ் கோகடே செல்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தது சர்ச்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியத்தில் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பாஜக, ஷிண்டே பிரிவு சிவசேனா, அஜித் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் ஆகிய கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா கட்சி இரண்டாக பிளவுப்பட்டு ஷிண்டே அணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு வைக்கிறது. உத்தவ் தாக்கரே அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது. […]