திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி வீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள, இழைக்க உள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்துக்கூற வேண்டும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின்கீழ் […]
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மீட்க வேண்டும்- ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களுடன், அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர் என்றும், இத்தகைய கைது நடவடிக்கைகள், படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பு ஆகியவை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது […]
தொகுதி மறுவரையறை குறித்து ஒன்றிய அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !
தொகுதி மறுவரையறை குறித்து ஒன்றிய அரசு தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “2026-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது எனவும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித் திட்டத்தை பாஜக […]