சிவகங்கையில் மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட நபர் உயிரிழப்பு !

சிவகங்கை அருகே மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட நபர் தண்ணீருக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவ அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மட்டிக்கரைப்பட்டி மட்டி கண்மாயில் இன்று பாரம்பரிய மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் பிரான்மலை, அரளிபட்டி, வேங்கைபட்டி போன்ற ஊர்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மீன் பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் மின்னல் வேகத்தில் ஓடி, கன்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர். தாங்கள் கொண்டு […]